மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகள் விற்பனை: கோவை இளைஞர் கைது

மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகள் விற்பனை: கோவை இளைஞர் கைது
Updated on
1 min read

ஆவடி: சென்​னை, போரூர்- பிள்​ளை​யார் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் யோகானந்த் (43). இவருக்கு சமூக வலை​தளம் மூலம் அறி​முக​மான சில நபர்​கள், ஒரு மொபைல் செயலி மூலம் கிரிப்டோ கரன்​சி​யில் முதலீடு செய்​தால், முதலீட்டு தொகை​யை​விட 3 மடங்கு லாபம் கிடைக்​கும் என்று கூறி​யுள்​ளனர்.

இதனை நம்​பிய யோகானந்த், அவர்கள் அனுப்​பிய 13 வங்கி கணக்​கு​களுக்கு பல்​வேறு தவணை​களில் ரூ.1,73,48,330-ஐ செலுத்​தி​யுள்​ளார். ஆனால் குறிப்​பிட்ட நாட்​கள் முடிந்​தும் யோகானந்த்​துக்கு 3 மடங்கு லாபம் மற்​றும் முதலீட்டு தொகை​ திரும்ப கிடைக்​காத​தால், தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்​தார்.

இதையடுத்​து, அவர் ஆவடி இணை​ய​வழி குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தார். அதன்​பேரில், காவல்​ஆய்​வாளர் சுபாஷினி தலை​மையி​லான ஆவடி இணை​ய​வழி குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

கோயம்​புத்​தூர், கவுண்​ட​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்த அன்​பழகன் (35), போலி நிறு​வனம் ஆரம்​பித்​து, அதன் பெயரில் பல ஊர்​களில் உள்ள பல்​வேறு வங்கி கிளை​களில் கணக்​கு​களை தொடங்​கி, அவற்றை இணை​ய​வழி மோசடி கும்​பலுக்கு விற்​பனை செய்​து, கமிஷன் தொகையை பெற்​றதும், அந்த வங்கி கணக்​கு​களுக்கு யோகானந்த்​தின் வங்கி கணக்​கில் இருந்து பணம் செலுத்​தப்​பட்​டுள்​ளதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அன்​பழகனை நேற்று முன் தினம் ஆவடி இணை​ய​வழி குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும், பொது​மக்​கள் இணைய தளங்​களில் வரும் போலி விளம்​பரங்​களை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்​டாம் என ஆவடி இணை​ய​வழி குற்​றப்​பிரிவு போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​.

மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகள் விற்பனை: கோவை இளைஞர் கைது
பணி ஆணை வழங்கப்படாததால் டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு 751 மருத்துவர்கள் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in