கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதான இருவரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதான இருவரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
Updated on
2 min read

கோவை: கோவையைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், கைதான இருவரை மூன்று நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து போலீஸார் மூவரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள், கடந்த மாதம் 21-ம் தேதி மாயமானார். மறுநாள் இரவு, கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் சடலமாக கிடந்தார். போலீஸாரின் விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதும், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தி (33) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும், இதற்கு அவரது நண்பர் மோகன் (30) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற கார்த்தி, கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின் சிறைக்கு திரும்பிய அவரை சக கைதிகள் தாக்கியதால் மீண்டும் கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இருவரையும் குண்டர் தடுப்புப் பிரிவிலும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் விவரங்களை பெற இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து சூலூர் போலீஸார், கடந்த 1-ம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில், இருவரையும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பகவதியம்மாள் விசாரித்தார்.

இதற்காக இன்று (ஜூன் 3) மதியம் மருத்துவமனையில் இருந்த கார்த்தி ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். சிறையில் இருந்து மோகனும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து போலீஸாரிடமும், கைதான இருவரிடமும் விசாரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கார்த்தி, மோகன் ஆகியோரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு நீதிபதி அனுமதித்தார். தொடர்ந்து சூலூர் போலீஸார் இருவரயும் பலத்த பாதுகாப்புடன் தங்களது கஸ்டடி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இருவரையும் தங்களது இடத்தி்ல் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, நேற்று (ஜூன் 2) மாலை சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில், கார்த்தி, மோகன் ஆகியோரை நீதிபதி முன்னிலையில் 2 சாட்சிகள் அடையாளம் காட்டினர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லெட் கொடுத்து அழைத்துச் சென்றதை பார்த்த ஒரு சாட்சி, வழித்தடத்தில் சிறுமியை கார்த்தி அழைத்து செல்வதை பார்த்த ஒரு சாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் காட்டினர்.

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதான இருவரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
இந்தியாவுக்கு 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம் - ‘கட்டாய உழைப்பு’ விதியை குறிப்பிட்டு ‘செக்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in