

நடிகை ட்விஷா
புதுடெல்லி: நடிகையும் மாடலுமான ட்விஷா சர்மா கடந்த மே 12ம் தேதி, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ட்விஷா சர்மாவின் மாமியாரும், ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற திருமணத்தின் போது ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதன்படி ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே ட்விஷாவுக்கு அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரி பாலா சிங் ஆகியோரால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
மேலும், திருமணத்துக்குப் பிறகு ட்விஷாவின் அடிப்படை தேவைகளுக்குக் கூட அவரது கணவரும் மாமியாரும் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால், ட்விஷாவின் பெற்றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.