சென்னை | மூதாட்டியிடம் நகை பறித்த கேட்டரிங் உரிமையாளர் கைது

சென்னை | மூதாட்டியிடம் நகை பறித்த கேட்டரிங் உரிமையாளர் கைது
Updated on: 
1 min read

சென்னை: சென்னை நங்​கநல்​லூர் இந்து காலனி​யில் வசித்து வருபவர் கண்​ணன் (56). தனி​யார் நிறு​வனத்​தில் வேலை செய்து வரு​கிறார்.

இவரது பெரி​யம்மா வைதேகி (85). அரு​கில் தனி​யாக வசித்து வரு​கிறார். கடந்த 20-ம் தேதி இரவு வைதேகி வீட்​டில் டி.​வி. பார்த்​துக்​கொண்​டிருந்​தார்.

அப்​போது மர்​மநபர் ஒரு​வர் அத்​து​மீறி வீட்​டுக்​குள் நுழைந்​து, அவரது கழுத்​தில் அணிந்​திருந்த 3 பவுன் தங்​கச் செயினை பறித்​தார்.

இதையடுத்து வைதேகியின் அலறல் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்​குள் வீட்​டுக்கு வெளியே நிறுத்​தி​யிருந்த பைக்​கில் ஏறி கொள்​ளை​யன் தப்​பி​னார்.

இதுகுறித்​து, ஆதம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். அப்​பகு​தி​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை போலீ​ஸார் ஆய்வு செய்​த​தில், வீடு புகுந்து மூதாட்​டி​யிடம் நகை பறித்து தப்​பியது நங்​கநல்​லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த குரு​ராஜன் (57) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், குரு​ராஜன் அப்​பகு​தி​யில் கேட்​டரிங் சர்​வீஸ் நடத்தி வந்​த​தாக​வும், தொழிலில் நஷ்டம் ஏற்​பட்ட​தால், நகை பறிக்க முடி​வெடுத்​த​தாக​வும், இளம் பெண்​களிடம் நகை பறித்​தால் மாட்​டிக் கொள்​வோம் என நினைத்​து, வீட்​டில் தனி​யாக இருந்த மூதாட்​டியை நோட்​ட​மிட்டு நகை பறிப்​பில் ஈடு​பட்​ட​தாக​வும் தெரிய​வந்​தது.

சென்னை | மூதாட்டியிடம் நகை பறித்த கேட்டரிங் உரிமையாளர் கைது
முதல்வர் வெறும் சினிமா வசனங்களை மட்டுமே பேசுகிறார்; பாஜகவும் திமுகவும் என்றுமே எதிரி கட்சிகள் - நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in