பள்ளிக் கல்விக் கட்டணத்தில் ரூ.6.67 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது

பள்ளிக் கல்விக் கட்டணத்தில் ரூ.6.67 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது
Updated on
1 min read

திருப்போரூர்: ​திருப்​போரூரை அடுத்த தண்​டலம் கிராமத்​தில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்​ளி​யில், ரூ.6.67 லட்​சம் கையாடல் செய்ததாக பள்ளி காசாளர் கைது செய்​யப்​பட்​டார்.

திருப்​போரூர் அருகே தண்​டலத்​தில் ஜே.எஸ்​.குளோபல் வித்​யாமந்​திர் என்ற தனி​யார் பள்ளி இயங்கி வரு​கிறது. இந்​தப் பள்​ளி​யில் கடந்த கல்​வி​யாண்​டில் மாணவர் சேர்க்கை மற்​றும் கல்விக் கட்​ட​ண​மாக வசூலிக்​கப்​பட்ட பணம் தொடர்​பான கணக்​கு​களை ஆய்வு செய்​யும் வகை​யில், கடந்த ஜூலை மாதம் தணிக்கை நடை​பெற்​றது.

அப்​போது பள்​ளி​யில் வசூலிக்​கப்​பட்ட கல்விக் கட்​ட​ணத் தொகைக்​கும், வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​பட்ட தொகைக்​கும் இடையே வேறு​பாடு இருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து கணக்​கு​களை அதி​காரி​கள் ஆய்வு செய்​த​போது, ரூ.6 லட்​சத்து 67 ஆயிரம் வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​ப​டா​மல் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து பள்ளி முதல்​வர் அர்ச்​ச​னா, திருப்​போரூர் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யில், பள்​ளி​யில் காசாள​ராகப் பணி​யாற்றி வந்த தையூரைச் சேர்ந்த சேகர் மகன் மனோஜ்கு​மார் (32) என்​பவர் மீது போலீ​ஸாருக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது.

அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், பள்​ளி​யில் வசூலிக்​கப்​பட்ட கல்விக் கட்​ட​ணப் பணத்​தில் ரூ.6.67 லட்​சத்தை வங்​கிக் கணக்​கில் செலுத்​தா​ததை ஒப்​புக்​கொண்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்து அவரை கைதுசெய்த போலீ​ஸார், நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர். மேலும் பள்​ளி​யின் கணக்​கு​கள், பணப் பரிவர்த்​தனை​கள் குறித்து தொடர்ந்து வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

பள்ளிக் கல்விக் கட்டணத்தில் ரூ.6.67 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றை சக்கர சைக்கிள் பயணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in