கரூர் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை: ரூ.2.90 லட்சம், அரை கிலோ வெள்ளி திருட்டு

கரூர் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை: ரூ.2.90 லட்சம், அரை கிலோ வெள்ளி திருட்டு
Updated on: 
1 min read

கரூர்: நிதி நிறுவன அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.2.90 லட்சம் பணம், 4 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகேயுள்ள கோவிந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (54). இவர் சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வார காலமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ராமலிங்கம் இன்று (நவ.19ம் தேதி) காலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ராமலிங்கம், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு ரூ.2.90 லட்சம் பணம், 4 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் சம்பவ நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கை ரேகை நிபுணர்களை கொண்டு தடையங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரூர் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை: ரூ.2.90 லட்சம், அரை கிலோ வெள்ளி திருட்டு
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

X