சோளிங்கர் தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

தனஞ்செழியன் மற்றும் எம்எல்ஏ கபில்.

தனஞ்செழியன் மற்றும் எம்எல்ஏ கபில்.

Updated on
1 min read

அரக்கோணம்: சோளிங்கரில் செய்தியாளர்களை தாக்கியது தொடர்பாக தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கடந்த ஜூலை 27-ம் தேதி செய்தியாளர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பத்திரிகை சுதந்திரத்தை தடுக்கும் வகையில், அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.

இதில், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்தது. சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதனையடுத்து, சோளிங்கர் போலீஸார் சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியின் ஆகிய இருவர் மீதும் 296 (b), 115 (2), 351 (2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>தனஞ்செழியன் மற்றும் எம்எல்ஏ கபில்.</p></div>
இளையோரைப் பண்படுத்தும் தேசிய மாணவர் படை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in