வறுமையை பயன்படுத்தி ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை வாங்கி சென்ற பெண்கள்: உடனடியாக மீட்ட போலீஸார்

வறுமையை பயன்படுத்தி ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை வாங்கி சென்ற பெண்கள்: உடனடியாக மீட்ட போலீஸார்
Updated on
1 min read

காரைக்குடி: குடும்ப வறுமையை பயன்​படுத்தி 45 நாட்​களே ஆன குழந்​தையை ரூ.3 லட்​சத்​துக்கு வாங்​கிச் சென்ற 3 பெண்​கள் குறித்து தாயார் அளித்த புகாரின்​பேரில் காரைக்​குடி போலீ​ஸார் விசா​ரித்து உடனடியாக குழந்தையை மீீட்டனர்.

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி மெமெ வீதி​யைச் சேர்ந்​தவர் பழனிகு​மார். டைல்ஸ் ஒட்​டும் தொழிலா​ளி. அவரது மனைவி லெட்​சுமி. இவர்​களுக்கு 3 பெண் குழந்​தைகள் இருந்​தநிலை​யில், லெட்​சுமி மீண்​டும் கர்ப்​ப​மா​னார். கடந்த மே 21-ம் தேதி காரைக்​குடி அரசு மருத்​து​வ​மனை​யில் லெட்​சுமிக்கு பெண் குழந்தை பிறந்​தது. அதேசம​யத்​தில், அந்த மருத்​து​வ​மனைக்கு வந்த பெண் ஒரு​வர், வறுமை​யில் இருக்​கும் உங்​களால் 4 பெண் குழந்​தைகளை​யும் வளர்க்க முடி​யாது. அதனால், ஒரு குழந்​தையை விற்று விடலாம் என்று தெரி​வித்​துள்​ளார்.

ஆனால், லட்​சுமி அதற்கு சம்​ம​திக்​க​வில்​லை. பின்​னர், மருத்​து​வ​மனை​யில் இருந்து வீட்​டுக்​குச் சென்ற நிலை​யில், கடந்த வாரம் லெட்​சுமி வீட்​டுக்கு சென்​னையைச் சேர்ந்த தம்​பதி வந்​தனர். அவர்​கள் பணம் தரு​வ​தாக குழந்​தையைக் கேட்​டனர். ஆனால், லெட்​சுமி மறுத்​துள்​ளார்.

நேற்று முன்​தினம் இரவு லெட்​சுமி​யும், அவரது மூத்த மகளும் வீட்​டில் இருந்​த​போது சென்னை தம்​பதி அனுப்​பிய​தாக கூறி, 3 பெண்​கள் அங்கு வந்​தனர். பின்​னர், ரூ.3 லட்​சம் கொடுத்​து​விட்டு லெட்​சுமி​யிடம் இருந்து குழந்​தையை வாங்​கிச் சென்​றனர். ஆனால், லெட்​சுமிக்கு இதை ஏற்க மனமில்​லாத​தால், டிஎஸ்பி ஆஷிஷ்புனி​யா​விடம் புகார் கொடுத்​தார். இதையடுத்து குழந்​தையை வாங்​கிச் சென்ற 3 பெண்​கள் குறித்து காரைக்​குடி தெற்கு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தினர்.

குழந்தை மீட்பு: இதுகுறித்து உதவி காவல் கண்​காணிப்​பாளர் ஆஷிஷ்புனியா தெரி​வித்​த​தாவது: புகார் வந்​ததும் குழந்​தையை மீட்டு விட்​டோம். மேலும், தாயாரே குழந்​தையை ரூ.5 லட்​சத்​துக்கு பேசி விற்​றுள்​ளார். ஆனால், 3 லட்​சம் கொடுத்​து​விட்டு மீதி​யைத் தராத​தால் புகார் கொடுத்​துள்​ளார். குழந்​தையை தத்​துக்​கொடுப்​ப​தில் சட்​ட​வி​தியை கடைப்​பிடிக்​காத​தால் இரு தரப்​பினர் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​படும், என்​றார்​.

வறுமையை பயன்படுத்தி ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை வாங்கி சென்ற பெண்கள்: உடனடியாக மீட்ட போலீஸார்
“ஒரு மணி நேரத்தில் ஒப்பந்த மீறல்” - ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in