சென்னை | அதிவேகமாக ஓட்டிய கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: தொழிலதிபர் கைது

சென்னை | அதிவேகமாக ஓட்டிய கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: தொழிலதிபர் கைது
Updated on
1 min read

சென்னை: ​கார் மோதிய விபத்​தில், ஆட்டோ ஓட்​டுநர் உயி​ரிழந்த விவ​காரத்​தில் தொழிலதிபர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். வடபழனி நெற்​குன்​றம் பாதை​யில் கடந்த 14-ம் தேதி ஆட்டோ சென்று கொண்​டிருந்​தது.

அப்​போது, அந்த வழி​யாக வேக​மாக வந்த கார் அந்த ஆட்டோ மீது மோதி நிற்​காமல் சென்​றது. இதில், பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்​டுநர் சாலிகி​ராமத்​தைச் சேர்ந்த பாஸ்​கர் (58) சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

விபத்து தொடர்​பாக பாண்டி பஜார் போக்​கு​வரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

சிசிடிவி கேமரா காட்​சிகள்

முதல்​கட்​ட​மாக சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் விசா​ரணை முன்​னெடுக்​கப்​பட்​டது.

இதில், விபத்தை ஏற்​படுத்தி நிற்​காமல் சென்ற காரை ஓட்​டியது சென்னை சாலிகி​ராமத்​தைச் சேர்ந்த நிஷாந்த் (29) என்​பதும், நண்​பர்​களை உற்​சாகப்​படுத்த சாலை​யில் அபாயகர​மான முறை​யில் காரை ஓட்​டிய​போது, கட்​டுப்​பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி​ய​தாக​வும், விபத்​தில் சிக்​கிய​வருக்கு அதிக ரத்​தப்​போக்கு ஏற்​பட்​டதைக் கண்டு பயந்து அங்​கிருந்து தப்பி ஓடிய​தாக​வும் போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்​து, அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர், அவரை நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைத்​தனர். காவல் ஆணையர் எச்சரிக்கை மது அருந்​தி​விட்டு அஜாக்​கிரதை​யாக​வும், அதிவேக​மாக​வும் வாக​னம் ஓட்​டு​பவர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை காவல் ஆணை​யர் அருண் எச்​சரித்​துள்​ளார்.

இது ஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட நிஷாந்த் மீது கொலைக்கு நிகரான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை | அதிவேகமாக ஓட்டிய கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: தொழிலதிபர் கைது
தமிழகத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை திமுக உருவாக்குகிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in