

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு கவின் நர்சரியைச் சேர்ந்தவர் ஜெபபாஸ்டின். ராணுவத்தில் பணிபுரிகிறார். இவருக்கும், காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மரிய பென்சியாவுக்கும் (26) இன்று (செப்13) திருமணம் நடக்கவிருந்தது.
இந்நிலையில், நேற்று மதுரையில் நடந்த நர்சிங் தேர்வில் பங்கேற்க பென்சியாவும் ஜெப பாஸ்டினும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். வாடிப்பட்டி அருகே வந்தபோது, முன் சென்ற காரின் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே மரிய பென்சியா உயிரிழந்தார். ஜெபபாஸ்டின் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.