நடிகை குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகை குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னை: ​சாந்​தோமில் உள்ள நடிகை குஷ்பு வீட்​டில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக​ டிஜிபி அலு​வலக மின்​னஞ்​சல் முகவரிக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

தகவலறிந்த உயர் அதி​காரி​கள், நடிகை குஷ்பு வீட்​டில் சோதனை நடத்​தும்​படி உத்​தர​விட்​டனர். இதையடுத்து வெடிகுண்டு கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​களும், போலீ​ஸாரும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்​தினர்.

பல மணி நேரம் நடை​பெற்ற சோதனை​யில், அங்​கிருந்து எந்த வெடிப்​பொருளும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.

இதனால், இது வெறும் புரளி என தெரிய​வந்​தது. இது தொடர்​பாக சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரிக்​கின்​றனர்.

2 நாட்​களுக்கு முன்பு நடிகை திரிஷா வீட்​டுக்கு இதே​போல் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

நடிகை குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் இன்றும், நாளை மறுநாளும் தபால் வாக்கு: தேர்தல் பணியாற்றும் 18,971 போலீஸார் செலுத்துவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in