பெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட இளம் பெண் சடலம் மீட்பு - தாடியை மழித்துவிட்டு சைக்கிளில் சென்ற கொலையாளி!

சிக்கந்தர்

சிக்கந்தர்

Updated on
1 min read

சென்னை: ​கொலை செய்​யப்​பட்ட கணவன், மகன் உடல் கண்​டெடுக்​கப்​பட்ட நிலை​யில் பெருங்​குடி குப்​பைக் கிடங்​கில் மூட்​டைகட்டி வீசப்​பட்ட இளம் பெண் சடலம் 3-வது நாள் தேடு​தலில் கண்​டு​ பிடிக்​கப்​பட்​டது.

பிஹார் மாநிலம், ஷேக்​பூரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கவுரவ் குமார் (24). இவர் கொலை செய்​யப்​பட்​டு, சாக்கு மூட்​டை​யில் கட்டி அடை​யார், இந்​திரா நகர், 1-வது அவென்​யூ​வில் கடந்த 26-ம் தேதி வீசப்​பட்​டார்.

இது தொடர்​பாக அடை​யாறு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து அதே மாநிலத்​தைச் சேர்ந்த காவலாளி சிக்கந்தர் என்ற சத்​யேந்​தர் (30), கூட்​டாளி​களான அதே மாநிலத்​தைச் சேர்ந்த லலித் யாதவ் (40), விகாஷ் குமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் கவுரவ் குமார் மட்​டும் அல்​லாமல் அவரது மனைவி முனிதா குமாரி (22), மகன் பிர்​மானி குமார் (2) ஆகியோரை​யும் கொலை செய்து சாக்கு மூட்​டை​யில் கட்டி வீசி​யது தெரிந்​தது. குறிப்​பாக மகன் மத்​திய கைலாஷ் ரயில்வே பாலத்​தின் கீழ் உள்ள பக்​கிங்​ஹாம் கால்​வாய், மனைவி பெருங்​குடி குப்பைக் கிடங்​கில் வீசப்​பட்​டனர்.

பிஹார் இளைஞர், அவரது மகன் உடல்​கள் அடுத்​தடுத்து மீட்​கப்​பட்ட நிலை​யில், மனைவி உடலை பொக்​லைன் இயந்​திரம் மூலம் பெருங்​குடி குப்பைக் கிடங்​கில் போலீ​ஸார் தொடர்ந்து தேடினர். நேற்று 3-வது நாளாக 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் மற்​றும் மாநக​ராட்சி ஊழியர்​கள் குப்பையை கிளறி தேடினர். இதையடுத்து மதி​யம் 12 மணி​யள​வில் முனிதா குமாரி உடல் மீட்​கப்​பட்​டது.

முன்​ன​தாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட மூவரும் முனிதா குமாரியை பாலியல் பலாத்​காரம் செய்ய முயன்​றதும், ஒத்​துழைக்​காத அவரை​யும், தடுக்க முயன்ற அவரது கணவரை​யும், அழுது கொண்​டிருந்த மகனை​யும் அடித்து கொலை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து இவர்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

கொலை​யான கவுரவ் குமார் பிஹாரிலிருந்து சென்​னைக்கு வேலை தேடி புறப்​பட்​ட​போது, அவரது மனை​வி​யும் கூடவே புறப்​பட்​டுள்​ளார். `வேலை கிடைத்த பிறகு குடும்​பத்​தோடு செல்​லுங்​கள். அது​வரை செல்ல வேண்​டாம்' என கவுரவ் குமார் குடும்​பத்​தினர் அறி​வுறுத்தி உள்​ளனர். ஆனால் முனிதா குமாரி கேட்​காமல், குழந்​தை​யுடன் கிளம்​பி​யுள்​ளார்.

இந்​நிலை​யில்​தான் சக மாநிலத்​தவர்​களாலேயே இந்த நிலை ஏற்​பட்​டுள்​ளது. மேலும் கொலை தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரிக்​கச் சென்​ற​போது சத்​யேந்​தர் தாடி​யுடன் இருந்த தன் முகத்தை மழித்​து​ விட்​டு, போலீ​ஸார் முன்​பாகவே எது​வும் தெரி​யாதது​போல் சைக்​கிளில் சா​தா​ரண​மாக சென்​றுள்​ளார். சந்​தேகத்​தின்​பேரில் அவரை பிடித்து வி​சா​ரித்​த​போது அனைத்​து தகவல்​களும்​ வெளிவந்​தன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>சிக்கந்தர்</p></div>
ஆம்ஸ்ட்ராங் கொலை: பொன்னை பாலுவுக்கு 5 நாள் ஜாமீன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in