அரும்பாக்கம் 100 அடி சாலை​யில் பைக் ரேஸ்: மனைவி, கைக்குழந்தையுடன் சென்றவரின் வாகனத்துடன் உரசல் - 10 இளைஞர்கள் பிடிபட்டனர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பைக் ரேஸில் ஈடு​பட்ட 10 இளைஞர்​கள் போலீ​ஸாரிடம் பிடிபட்​டனர். சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலை​யம் அருகே 100 அடி சாலை வழி​யாக நேற்று முன்​தினம் இரவு குமார் என்​பவர் தனது மனைவி மற்​றும் ஒரு வயது குழந்​தை​யுடன் பைக்​கில் கோயம்​பேடு நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, பின்​னால் அதிவேக​மாக வந்த ஒரு பைக் குமாரின் வாக​னத்தை லேசாக உரசி​யபடி சென்​றது. இதில் நிலை​தடு​மாறிய குமாரின் பைக் சாலை​யில் சாய்ந்​தது. அதிர்​ஷ்ட​வச​மாக அவருக்கோ அவரது மனைவி மற்​றும் குழந்​தைக்கோ காயம் எது​வும் ஏற்​பட​வில்​லை.

எதிர்​பா​ராத சம்​பவத்​தால் அதிர்ச்​சி​யடைந்த குமாருக்​கு, அங்கு திரண்ட மக்​கள் தண்​ணீர் கொடுத்து ஆசு​வாசப்​படுத்​தினர். பின்​னர் இதுகுறித்து காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து கோயம்​பேடு போக்​கு​வரத்து போலீ​ஸாரும், சூளைமேடு ரோந்து போலீ​ஸாரும் இணைந்து நள்​ளிரவு சம்​பந்​தப்​பட்ட வாக​னங்​களை பிடிக்க வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அதிவேக​மாக வந்த 5 பைக்​கு​களை போலீ​ஸார் அடுத்​தடுத்து மடக்​கிப் பிடித்து நடத்​திய விசா​ரணை​யில், அந்த இளைஞர்​கள் பைக் ரேசில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது.

இதையடுத்து பைக் ரேசில் ஈடு​பட்ட 10 இளைஞர்​களை போலீ​ஸார் பிடித்​ததுடன், அவர்​கள் பயன்​படுத்​திய 5 விலை உயர்ந்த பைக்​கு​களை​யும் பறி​முதல் செய்​தனர்.

பின்​னர் அனை​வரை​யும் அண்​ணாநகர் போக்​கு​வரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். இதுகுறித்து அண்​ணாநகர் போக்​கு​வரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

மேலும், பைக் ரேசில் ஈடு​பட்ட இளைஞர்​களின் பெற்​றோருக்கு தகவல் தெரி​வித்து அவர்​களை​யும் காவல் நிலை​யம் வரவழைத்து பெற்​றோர் முன்​னிலை​யில் இளைஞர்​களை போலீ​ஸார் எச்​சரித்​தனர். பிள்​ளை​களை நல்​வழிப்​படுத்த வேண்​டும் என பெற்​றோருக்​கு அறி​வுரை​யும்​ வழங்​கினர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in