வீட்டின் பூட்டை திறந்து 76 கிராம் தங்க நகைகள் திருட்டு: இளம்பெண், 3 சிறுவர்கள் கைது

வீட்டின் பூட்டை திறந்து 76 கிராம் தங்க நகைகள் திருட்டு: இளம்பெண், 3 சிறுவர்கள் கைது
Updated on: 
1 min read

சென்னை: அயனாவரம் சோமசுந்​தரம் 3-வது தெரு​வில் வசித்து வருபவர் ஸ்ரீவத்​சன் (35). இவர் தனியார் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வருகிறார். கடந்த ஜூன் 17-ம் தேதி மதி​யம் இவரது தாயார் வீட்டைப் பூட்​டி​விட்டு, அதன் சாவியை அரு​கில் உள்ள ஜன்​னலில் வைத்​து​விட்டு, அதே பகுதி​யில் வசிக்​கும் தனது மூத்த மகன் வீட்டுக்​குச் சென்​றுள்​ளார்.

இரவு வீடு திரும்​பியபோது, வீட்​டின் பீரோவில் வைத்​திருந்த தங்க வளை​யல்​கள், கம்​மல்​கள், மோதிரங்​கள், கைச்​செயின் உள்​ளிட்ட சுமார் 76 கிராம் தங்க நகைகள் மற்​றும் 650 கிராம் வெள்​ளிப் பொருட்​கள் திருடு​போனது தெரிய​வந்​தது. இது​குறித்து ஸ்ரீவத்​சன் அளித்த புகாரின்​பேரில், அயனாவரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதில் திருட்​டில் ஈடு​பட்ட 3 சிறார்​களை பிடித்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் 3 சிறார்​களும் வீட்டை நோட்​ட​மிட்டு, ஜன்​னலில் இருந்த சாவியை எடுத்​து வீட்டின் உள்ளே சென்​று பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்​ளிப் பொருட்​களைத் திருடி, பெரம்​பூரைச் சேர்ந்த கீர்த்​திகாவிடம் (23) கொடுத்​து பணம் பெற்றது தெரிய​வந்​தது.

இதையடுத்து, கீர்த்​திகாவை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். அவரிட​மிருந்து சுமார் 11 கிராம் தங்க நகைகள் மற்​றும் 500 கிராம் வெள்​ளிக்​கட்​டியை மீட்​டனர். 3 சிறார்​களும் சிறு​வர் கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்க்​கப்​பட்​டனர்.

வீட்டின் பூட்டை திறந்து 76 கிராம் தங்க நகைகள் திருட்டு: இளம்பெண், 3 சிறுவர்கள் கைது
அரசுப் பள்ளிகளில் 3 நாட்கள் புத்தகப் பை இல்லாத கல்வி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

X