போலீஸ் எஸ்ஐ-யை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி: தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை

போலீஸ் எஸ்ஐ-யை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி: தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை
Updated on
1 min read

சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்​ஐ-யை தாக்கி செல்​போன் பறிக்க முயன்ற, வழிப்​பறி கொள்​ளை​யர்​களை போலீ​ஸார் தனிப்​படை அமைத்து தேடி வரு​கின்​றனர்.

சென்னை ஆலந்​தூர், வடக்கு ராஜா தெரு​வைச் சேர்ந்​தவர் துரை​ராஜ் (39). இவர் ஆலந்​தூரில் உள்ள லஞ்ச ஒழிப்​புத்துறை​யில் எஸ்​ஐ-​யாக பணி​யாற்றி வரு​கிறார்.

இவர் நேற்று முன்​தினம் இரவு 10 மணி அளவில், ஆதம்​பாக்​கம் நியூ காலனி 1-வது தெரு​வில் உள்ள ஒரு மருந்​தகத்​துக்​குச் சென்று மாத்​திரைகளை வாங்​கிக்​கொண்​டு, பரங்​கிமலை சுரங்​கப்​பாதை சர்​வீஸ் சாலை வழி​யாக நடந்து வீட்​டுக்​குத் திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

ஆள் ​நட​மாட்​டம் குறைந்த பகு​தி​யில் அவர் நடந்து சென்​ற​போது, மர்ம நபர்​கள் 3 பேர் பின்​தொடர்ந்து வந்​தனர். திடீரென அவர்​கள் துரை​ராஜை தாக்கி அவர் கையில் வைத்​திருந்த விலை உயர்ந்த செல்​போனை பறிக்க முயன்​றனர்.

அவர்​களிடம் இருந்து தனது செல்​போனை விடா​மல் இறுகப் பற்​றிக்​கொண்ட துரை​ராஜ், வலி​யால் அலறி கூச்​சலிட்​டார். அவரது சத்​தத்​தைக் கேட்டு அரு​கில் இருந்​தவர்​கள் ஓடி வரு​வதைக் கண்ட மர்ம நபர்​கள், அங்​கிருந்து தப்பி ஓடி​விட்​டனர்.

இது ஒரு​புறம் இருக்க தாக்​குதலில் காயம் அடைந்த துரை​ராஜ் குரோம்​பேட்டை மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார். இந்த வழிப்​பறி விவ​காரம் தொடர்​பாக பரங்​கிமலை போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

முதல் கட்​ட​மாக தப்பி ஓடியவழிப்​பறி கொள்​ளை​யர்​களை சம்பவ இடம் மற்​றும் அதைச் சுற்றி பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் போலீ​ஸார் விசாரணை நடத்தி வரு​கின்​றனர்​.

போலீஸ் எஸ்ஐ-யை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி: தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை
பொது பிரச்சினையை சுட்டிக்காட்டியதற்காக ஆளுநரை விமர்சிப்பதா? - தமிழிசை கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in