அரியலூர் நகராட்சி ஆணையர் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு

லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை
அரியலூர் நகராட்சி ஆணையர் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

அரியலூர்: அரியலூர் நகராட்சி ஆணை​யர் மற்​றும் ஊழியர்​கள் உள்பட 12 பேர் மீது அரியலூர் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

அரியலூர் நகராட்சி அலு​வல​கத்​தில் ஜூலை 3-ம் தேதி காவல் ஆய்​வாளர் கவிதா தலை​மை​யில் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் சோதனை​ நடத்தி கணக்​கில் வராத ரூ.14 ஆயிரம் ரொக்​கத்தை கைப்​பற்​றினர்.

மேலும் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிநீர் ஒப்​பந்த நிறு​வனத்​தின் ஊழியர் ஒரு​வரிடம் இருந்து யுபிஐ மூலம் ரூ.5.47 லட்​சம் பரிவர்த்​தனை மேற்​கொள்​ளப்​பட்​டிருப்​பதை கண்​டு​பிடித்​தனர். இதைத்​ தொடர்ந்​து, அரியலூர் துணை ஆய்​வுக் குழு அலு​வலர் சின்​னையன் அளித்த புகாரின் பேரில், அரியலூர் நகராட்சி ஆணை​யர் அசோக்​கு​மார் மற்​றும் அலு​வலக ஊழியர்​கள் 11 பேர் என மொத்​தம் 12 பேர் மீது ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் நேற்று முன்​தினம் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

அரியலூர் நகராட்சி ஆணையர் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு
“மைலேஜ் குறைந்துவிட்டது” - E20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in