பொன்னேரி: இளைஞரை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

பொன்னேரி: இளைஞரை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
Updated on: 
1 min read

பொன்னேரி: பழவேற்​காட்​டில் கடலூர் இளைஞரை கொலை செய்து புதைத்த வழக்​கில் மேலும் ஒருவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கடலூர் மாவட்​டம் சிறு​வத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்த எழில்​செல்வி சென்​னை​யில் உள்ள நடிகை ராதிகா சரத்​குமார் இல்​லத்​தில் பணிப்​பெண்​ணாக உள்​ளார்.

இவரது மகன் பிரசாந்த் (19) கடந்த 27-ம் தேதி சென்​னை​யில் உள்ள தனது தாயைப் பார்க்​கச் செல்​வ​தாக தாய்​மாமன் ரமேஷிடம் கூறி​விட்டு கடலூரி​லிருந்து வந்​தார். மறுநாள் (அக்.28) அவர் மாய​மானதாக கடலூர் மாவட்​டம் புதுப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் தாய்​மாமன் ரமேஷ் புகார் அளித்​துள்​ளார்.

இதில் போலீ​ஸார் மேற்​கொண்ட விசா​ரணை​யில், தேவ​ராசு என்​பவரின் மனைவியுடன் பிரசாந்​துக்கு திரு​மணத்தை மீறிய உறவு இருந்​தால் அவர் தனதுநண்​பன் தினேஷுடன் இணைந்து பழவேற்​காட்​டில் பிரசாந்தை கொலை செய்​தது தெரிய​வந்​தது.

எனவே இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்து பழவேற்​காடு அழைத்து வந்து பிரசாந்​தின் உடலை மீட்​டனர். இதையடுத்து திருப்​பாலை​வனம் போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்து இரு​வரை​யும் கைது செய்து தொடர் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இந்த விசா​ரணை​யின்​போது தேவ​ராசுவின் மனைவி சுமித்​ரா​வுடன் ஏற்​பட்ட பழக்​கத்​தால் சுமித்ரா அழைப்​பின் பேரில் சென்​னைக்கு வந்த பிரசாந்த், கடந்த 28-ம் தேதி பழவேற்​காட்​டில் உள்ள தனது தோழி வீட்​டுக்கு வந்​துள்​ளார்.

கணவரை விடுத்து வேறு ஒரு​வருடன் சுமித்ரா வந்​ததால் அதிர்ச்​சி​யடைந்த தோழி இது தொடர்​பாக சுமித்ரா குடும்​பத்​துக்கு தகவல் தெரி​வித்​துள்​ளார். உடனே சுமித்​ராவின் குடும்​பத்​தினர் பழவேற்​காடு வந்து அவரை தங்​களு​டன் அழைத்​துச் சென்​று​விட்​டனர்.

மேலும் சுமித்​ராவின் கணவர் தேவ​ராசு, அவரது நண்​பர் தினேஷ், பழவேற்​காட்​டைச் சேர்ந்த சஞ்​சய் மூவரும் இணைந்து பிரசாந்தை கொலை செய்து கடற்​கரை மணல் பரப்​பில் புதைத்​தது தெரிய​வந்​தது. ஏற்​கெனவே இவ்​வழக்​கில் தேவ​ராசு, தினேஷ் கைதான நிலை​யில், சஞ்​சயையும் திருப்​பாலை​வனம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

பொன்னேரி: இளைஞரை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
நலம் ஏஐ செயலி மூலம் முன்பதிவு செய்து மருந்துகள் வாங்கும் முறை விரைவில் அறிமுகம் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்

X