சென்னை | கஞ்சா விற்பனை வழக்கில் அதிமுக பிரமுகர் மகன் கைது

சென்னை | கஞ்சா விற்பனை வழக்கில் அதிமுக பிரமுகர் மகன் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை போரூர் மாத​னாங்​குப்​பம், அன்னை வேளாங்​கண்ணி நகரில் உள்ள ஒரு வீட்​டில் உயர் ரக கஞ்சா பதுக்கி வைத்து விற்​பனை செய்​யப்​பட்டு வரு​வ​தாக சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறிவு பிரிவு போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, போலீ​ஸார் சம்​பந்​தப்​பட்ட வீட்​டில் நுழைந்து சோதனை நடத்​தி, அங்கு பதுக்கி வைத்​திருந்த 700 கிராம் ஒஜி வகை​யான உயர் ரக கஞ்​சாவை பறி​முதல் செய்​தனர்.

இதுதொடர்பாக, பூந்​தமல்​லியை அடுத்த செம்​பரம்​பாக்​கத்​தைச் சேர்ந்த சுனில் (21), அவரது நண்​பர்​களான கோவூரைச் சேர்ந்த வருண் (23), அய்​யப்​பன் தாங்​கலைச் சேர்ந்த விஸ்​வேஸ் (22) ஆகிய 3 பேரை கைது செய்​தனர்.

சுனிலின் தந்தை கபிலன் அதிமுகவில் திரு​வள்​ளூர் மாவட்ட ஒன்​றிய இளைஞரணி துணைச் செய​லா​ள​ராக பதவி வகித்து வரு​வ​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இவர்​களது பின்​னணி மற்​றும் கூட்​டாளி​கள் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

சென்னை | கஞ்சா விற்பனை வழக்கில் அதிமுக பிரமுகர் மகன் கைது
ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள தங்க நகை 15 நிமிடத்தில் மீட்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in