Published : 31 May 2023 06:12 AM
Last Updated : 31 May 2023 06:12 AM

கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணம்: சிபிசிஐடி போலீஸாரிடம் குற்றப்பத்திரிகை நகலை கோரும் மாணவியின் தாய் செல்வி

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்தாண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்டார்.

பள்ளி விடுதி கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக் கப்பட்ட நிலையில், மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும், உறவி னர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது நடைபெற்ற போராட் டத்தின் போது பெரும் கலவரம் ஏற்பட்டு அப்பள்ளிக் கட்டிடம் முழுவதும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டும் தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.

இதையடுத்து தனியார் பள்ளிதாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகளான கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றச்சாட்டிற்குள்ளான தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகளான கிருத் திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேர் மீது 1,200 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த 15-ம்தேதி விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸாரின் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்த மாணவியின் தாய் செல்வி, சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியை நேரில் சந்தித்து, தனது மகள் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது தாக்கல்செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக் கையின் நகலை தனக்கு வழங்கு மாறு கேட்டு மனு ஒன்றை வழங்கினார்.

நேரடியாக குற்றப்பத்திரிகை நகலை தங்களிடம் வழங்க எங்களுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பாக விழுப்புரம் நீதிமன் றத்தை நேரில் அனுகிடுமாறு சிபிசிஐடி போலீஸார் செல்வியிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே மாணவியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த வழக்கில் இருந்து பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகியோரை நீக்கியுள்ளனர்.

இது தொடர்பாக எங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக வரும் 5-ம் தேதி எனது கருத்தை தெரிவிக்குமாறு விழுப்புரம் நீதிமன்றம் எனக்கு மனு அனுப்பியுள்ளது. குற்றப் பத்திரிகையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீதிமன்றத்தில் நான் எப்படி கருத்தை தெரிவிக்க முடியும். ஒருதலைபட்சமாக சிபிசிஐடி போலீஸார் விசா ரணை நடத்தியுள்ளனர். ஒரு நபர் விசாரணை கமிஷன் நிய மிக்க அரசுக்கு கோரிக்கை வைத் துள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x