

சென்னை: சென்னை சைதாப்பேட்டை, சேஷாச்சலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் மோகன்ராஜ் (35) என்பவர் தங்கியுள்ளார். நள்ளிரவில் கொள்ளையன் ஒருவர் மோகன்ராஜின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருடியுள்ளார். சத்தம்கேட்டு கண் விழித்த மோகன்ராஜ், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.
உடனே அந்த நபர் செல்போனை வீசிவிட்டு, 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது, மரக்கிளையில் சிக்கி அங்கிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சைதாப்பேட்டை போலீஸார், நடத்திய விசாரணையில் அவர்சைதாப்பேட்டை கோட்டமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் (31) என்பது தெரிந்தது.