Published : 29 May 2023 06:12 AM
Last Updated : 29 May 2023 06:12 AM
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரியஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.58 கோடியை போலீஸார்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) போலீஸார் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ரயிலில்இருந்து இறங்கி வந்த4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகபேசினர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்தபோது, அவற்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதைத் தொடர்ந்து, ஆர்பிஎஃப்அலுவலகத்துக்கு 4 பேரையும் அழைத்து வந்து விசாரித்தனர்.
அவர்களது பைகளில் ரூ.1 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. பணத்துக்கு உண்டான ஆவணங்களை கேட்டபோது, அவர்கள் முறையானவிளக்கம் அளிக்கவில்லை. பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரிடமும்தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
பணத்தை கொண்டு வந்தவர்கள் ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த முகமது முதாசீர் குராஷி (36), ஹோலாகுண்டா நியாஸ் அகமது (45), பைக் இம்ரான் (22), அப்துல் ரஹீம்(32) என்பது தெரியவந்தது. ஆந்திர மாநிலத்தில் சொந்தமாக துணிக்கடை வைத்திருப்பதாகவும், துணி வாங்குவதற்காக பணத்துடன் சென்னைவந்ததாகவும், மற்றொருவர் தங்கம்வாங்க வந்ததாகவும் மாறி மாறிதெரிவித்தனர்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸார், பிடிபட்ட பணத்தையும் 4 பேரையும் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டதுஹவாலா பணமா, யாரிடம் கொடுப்பதற்காக இதை கொண்டு வந்தனர் என 4 பேரிடமும் வருமானவரித் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT