Published : 26 May 2023 06:04 AM
Last Updated : 26 May 2023 06:04 AM

சென்னை | கத்தியை காட்டி மிரட்டி ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி

சென்னை: கத்தியை காட்டி மிரட்டி ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரெட்ரிச் வின்சென்ட்(23). இவர் இந்தியாவுக்கு சுற்றுலா பயணமாக, இலங்கை வழியாக நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில் சென்டிரல் சென்று, தனது பாஸ்போர்ட்டை காண்பித்து இந்திய சிம் கார்டு பெற்றுக் கொண்டார். பின், இரவு சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு நடந்து சென்றார்.

அப்போது மேட்டுக்குப்பம் சாலை, ஜெயராம் நகர் வழியாக சென்றபோது, தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 பேக்குகளை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இந்த பேக்குகளில் லேப்டாப் மற்றும் அவரது உடைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன. அத்துடன் செல்போன், பாஸ்போர்ட், பர்ஸ் ஆகியவற்றை அவர் கையில் வைத்து இருந்ததால் வழிப்பறி செய்தவர்களிடம் இருந்து தப்பியது.

இதையடுத்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வளசரவாக்கம் போலீஸார், வெளிநாட்டு பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜெர்மன் பயணிக்கு தங்குவதற்குரிய ஏற்பாடுகளை வளசரவாக்கம் போலீஸார் செய்து கொடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x