திருச்சி | வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.2 லட்சம் திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி தற்கொலை

திருச்சி | வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.2 லட்சம் திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி தற்கொலை
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள நெய்வேலி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (51). காய்கறி வியாபாரி. இவரதுவங்கிக் கணக்கில் ஓராண்டுக்கு முன்பு திடீரென ரூ.2 லட்சம் வந்தது. ஒரு சில நாட்கள் வைத்திருந்த முருகேசன், யாரும் உரிமை கோராததால் செலவழித்துவிட்டார்.

இந்நிலையில், முருகேசன் வங்கிக் கணக்குக்கு தவறுதலாக பணத்தைச் செலுத்தியவர், பணத்தை மீட்டுத் தருமாறு முசிறியில் உள்ள கனரா வங்கிக் கிளையில் மனு அளித்தார். இதன்பேரில், வங்கி அதிகாரிகள் முருகேசனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி, மே 22-ம் தேதி வங்கிக்கு வந்து, பணத்தைச் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்ததால், மனஉளைச்சல் அடைந்த முருகேசன், மே 19-ம் தேதி இரவு தோட்டத்துக்குச் சென்று, பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த வாத்தலை போலீஸார் சென்று, முருகேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in