கடைகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு: சிவகங்கை வியாபாரிகள் அச்சம்

கடைகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு: சிவகங்கை வியாபாரிகள் அச்சம்
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை நகரில் பணம் கேட்டும், வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமலும் கடைகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் மனோபாலா. இவரது கடைக்கு வந்த டி.புதூரைச் சேர்ந்த அழகுபாண்டி மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தர மனோபாலா மறுத்தார். இதையடுத்து அழகுபாண்டி, தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மனோபாலாவை அரிவா ளால் வெட்டிவிட்டு தப்பினார். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை தெப்பக்குளம் கரையில் உள்ள உணவகத்தில் பார்சல் உணவு வாங்கிய 2 பேர், பணத்தை தராமல் உரிமை யாளரை தாக்கிவிட்டு தப்பினர்.

சிவகங்கை நகரில் பணம் கேட்டும், வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமலும் கடைகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில், தற்போது கடை வியாபாரிகளை தாக்கும் சம்பவங்களும் அதிக ரித்து வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் சமூகவிரோதிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in