சென்னை | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டு சிறை

Published on

சென்னை: சிறுமிக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரோனா கால கட்டத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தபோது 11 வயது சிறுமி தனது தோழியின் வீட்டுக்கு படிக்க சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை அந்த சிறுமிக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அரசு ரூ.7 லட்சம் வழங்க உத்தரவு: இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்தபுகாரின் பேரில் அடையார் அனைத்து மகளிர் போலீஸார் அந்த நபரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும்ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துதீர்ப்பளித்துள்ளார்.

இந்த அபராதத் தொகையை சிறுமிக்கு வழங்கவும், மேலும் தமிழக அரசும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in