ஓசூரில் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

ஓசூரில் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதுன்ராய் (24). இவர் ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை அவர் தங்கியிருந்த மாடியின் 3-வது தளத்தில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in