

அகமதாபாத்: குஜராத்தில் ரூ.217 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்திற்குள் கடல் வழியாக போதைப் பொருள்கடத்திவரப்படுவது தொடர்பாகநைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
இதில், குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம், பத்தரி தாலுகாவில் ஹெராயின் போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து 31 கிலோ ஹெராயினை ஏடிஎஸ் போலீஸார் கைப்பற்றினர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.217 கோடியாகும்.
இதையடுத்து நைஜீரிய நாட்டு பிரஜையை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை மே 24 வரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.