சென்னை: நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆண் சடலம்

சென்னை: நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆண் சடலம்
Updated on
1 min read

சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அரவிந்த். இவர், கடந்த 8-ம் தேதி வீட்டின் முன் சாலையில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் காரை எடுப்பதற்காக வந்தபோது, பின் இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணையை தொடங்கினர். முதல் கட்ட விசாரணையில், அரவிந்த் கார் கதவை பூட்டாமல்சென்றிருப்பதும், அதைப் பயன்படுத்தி இறந்த நபர் காருக்குள் சென்றிருப்பதும் தெரியவந்தது. அதேவேளையில் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in