

தூத்துக்குடி: உடன்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கொலை செய்யப்பட்டார். உடன்குடி அருகே உள்ள மணப்பாட்டை சேர்ந்தரஸ்கின் டீரோஸ் என்பவரின் மனைவி மெட்டில்டா (55). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கணவர்மும்பையிலும், மகன் சென்னையிலும் பணியாற்றி வருவதால் உடன்குடி அருகே பண்டாரஞ் செட்டிவிளையில் வாடகை வீட்டில் மெட்டில்டா தனியாக வசித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மெட்டில்டாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மெட்டில்டா வீட்டில் இறந்துகிடந்தார்.
அவரது கழுத்தில் காயங்கள் காணப்பட்டன. குலசேகரன்பட்டினம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மெட்டில்டாவின் அண்ணன் மகனான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புத்தன்துறையைச் சேர்ந்த ஜெயதீபக் (35) என்பவர் இக்கொலையில் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. ஜெயதீபக்கை போலீஸார் கைது செய்தனர். ஜெயதீபக் பணம் கேட்டு, மெட்டில்டா தர மறுத்ததால் இக்கொலை நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.