

கொடைக்கானல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனி ராஜா(50). இவருக்குச் சொந்தமான தங்கும் விடுதி கொடைக்கானலில் உள்ளது.
இந்த விடுதிக்கு சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், காங்கிரஸ் நிர்வாகியுமான ஒருவர் தனது வழக்கறிஞர் மனைவி மற்றும் உறவினர்களோடு வந்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் அந்த பெண் வழக்கறிஞருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் மட்டும் சுற்றுலா இடங்களை பார்க்கச் சென்றுவிட்டனர். அப்போது பெண் வழக்கறிஞருக்கு உதவி செய்வதுபோல அவரது அறைக்குச் சென்ற அப்துல்கனிராஜா தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸார் நேற்று அப்துல்கனி ராஜாவை கைது செய்தனர். இவர் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர் சங்கத் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.