

ராமேசுவரம்: ராமேசுவரம் ஜெ.ஜெ. நகரில் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. அங்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும்படியாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
கடந்த வெள்ளிக்கிழமை போலீஸார் அந்த காரை சோதனையிட்டதில், அதில் 79 பண்டல்களில் 160 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் சொசுசு காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் ஜார்கண்ட் மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ராமநாத சுவாமி கோயிலில் தொகுப்பூதிய பணியாளராக பணியாற்றும் ராமேசுவரத்தைச் சேர்ந்த தனசேகரன் (31) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.