

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. அப்போது வந்த3 ஆண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை சோதனை செய்ததில், ரூ.1.21 கோடி மதிப்புள்ள 2 கிலோ 304 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோல், ஐதராபாத்தில் இருந்து வந்த ஆண் பயணி ரூ.37லட்சம் மதிப்புள்ள 702 கிராம் தங்கத்தையும், துபாயில் இருந்துவந்த பெண் பயணி ரூ.44.96 லட்சம்மதிப்புள்ள 852 கிராம் தங்கத்தையும் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மொத்தம் ரூ.2.03 கோடி மதிப்புள்ள 3 கிலோ 804 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.