

சென்னை: மெத்தம்பெட்டமைன் வகை போதை பொருளை காரில் கடத்தியதாக வியாபாரிகள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் ராயபுரம், அண்ணா பார்க் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருளை கடத்தி வந்ததாக தேவகோட்டை காசிம் (40), கடலூர் மாவட்டம், நல்லத்தூர் குமரவேல் (38) ஆகிய இரு வியாபாரிகளையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடமிருந்து 500 கிராம் மெத்தம்பெட்டமைன், கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய மேலும் இருவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.