விருதுநகர் | காணாமல்போன ரூ.23 லட்சம் மதிப்பிலான 150 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

விருதுநகர் | காணாமல்போன ரூ.23 லட்சம் மதிப்பிலான 150 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன ரூ.23 லட்சம் மதிப்பிலான 150 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் செல்போன்கள் திருடுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலைங்களிலும் சைபர் கிரைம் பிரிவிலும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

போலீஸார் வழக்குப் பதிந்து விருதுநகர் காவல் உட்கோட்டத்தில் 20, ராஜபாளையத்தில் 32, ஸ்ரீவில்லிபுத்தூரில் 20, சாத்தூரில் 20, சிவகாசியில் 20, அருப்புக்கோட்டையில் 16 மற்றும் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்ட காணாமல் போன ரூ.23 லட்சம் மதிப்பிலான செல்போன்களை சைபர்கிரைம் போலீஸார் மீட்டனர்.

செல்போன்களை பறிகொடுத்தவர்களிடம் செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், எஸ்.பி. ஸ்ரீநிவாசபெருமாள் கலந்துகொண்டு மீட்கப்பட்ட 150 செல்போன்களையும் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும், ஆன்லைன் மோசடிகள் மூலம் பணத்தை இழந்த சங்கர் கணேஷ் என்பவருக்கு ரூ.2.50 லட்சத்தையும், பவித்ரா என்பவருக்கு ரூ.2.28 லட்சத்தையும், சுதா பாண்டியன் என்பவருக்கு ரூ.ரூ.75 ஆயிரம், முத்துப்பாண்டி என்பருக்கு ரூ.50 ஆயிரம், கருப்பசாமி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், விஷ்ணு பிரியா என்பவருக்கு ரூ.25 ஆயிரம்,

விபேஷன் என்பவருக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் சண்முக பெருமாள் என்பவருக்கு ரூ.1,190 என மொத்தம் ரூ.6,86,190 ஐ மீட்டு அவர்களது வங்கிக் கணக்கில் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆணைகளையும் உரியவர்களிடம் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி. சோம சுந்தரம் உள்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in