சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி

சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி
Updated on
1 min read

செங்கல்பட்டு: சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் ரகு. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில் ரகுவை கைது செய்த போலீஸார் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறையில் இருந்த ரகு நேற்று முன்தினம் இரவு சிறையில் உள்ள கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை கண்ட சிறை காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in