கள்ளக்குறிச்சி அருகே மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் - கைது செய்ய சென்ற எஸ்.ஐ-க்கும் கத்திக் குத்து

கள்ளக்குறிச்சி அருகே மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் - கைது செய்ய சென்ற எஸ்.ஐ-க்கும் கத்திக் குத்து
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை பிடிக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரையும் கத்தியால் குத்தினார். போலீஸார் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- விஜயா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விஜயா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். முருகன், விஜயாவை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் நேற்று மாலை விஜயாவின் தாய் வீட்டிற்கு சென்று, விஜயாவை கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு கத்தியோடு நின்றி ருந்த முருகனைப் பிடிக்க முயற்சித்தபோது, அவர் உதவி ஆய்வாளர் சத்தியசீலனையும் கத்தியால் குத்தி காயப்படுத்தினார். உடனிருந்த போலீஸார், முருகனை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த உதவி ஆய்வாளர் சத்தியசீலன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in