

ராமேசுவரம்: பாம்பனில் மாயமான சிறுமி, இளம் பெண்ணை கள்ளக்குறிச்சியில் மீட்ட போலீஸார், ஒடிசா மாநில இளைஞர் உட்பட 2 பேரை போக்சோவில் கைது செய்தனர்.
ராமேசுவரம் அருகே மண்டபத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா நிலம் சுபர்ணாபர் பகுதியைச் சேர்ந்த திக்குன் மெல்லி (23) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும், அங்கு பணியாற்றிய பாம்பன் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த இளம்பெண்ணும், அவரது உறவினர் 14 வயது சிறுமியும் கடந்த ஏப்.28-ம் தேதி மாயமாகினர்.
இது குறித்து சிறுமியின் தந்தை பாம்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் கள்ளக்குறிச்சியில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கள்ளக்குறிச்சி சென்று ரிஷிவந்தியம் குளத்துமேடு தெருவைச் சேர்ந்த விக்ரம் (21) என்பவர் வீட்டில் ஒடிசா மாநில இளைஞர் திக்குன் மெல்லியுடன் இருந்த இளம்பெண் மற்றும் சிறுமியை மீட்டனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி விக்ரம், ஒடிஷா மாநில இளைஞர் திக்குன் மெல்லி ஆகிய இருவரையும் போக்சோவில் பாம்பன் போலீஸார் கைது செய்தனர்.