

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமியின் குடும்பத்தாரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாச லத்தில் கடந்த மாதம் 6 வயது சிறுமி பள்ளி தாளாளரால் பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக் கப்பட்ட சம்பவத்தில், பள்ளியின் தாளாளரும் விருத்தாசலம் நகர்மன்ற 30-வது வார்டு கவுன்சில ருமான பக்கிரிசாமி என்பவரை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பக்கிரி சாமியை திமுகவில் இருந்து அக்கட்சி தலைமை நீக்கியது. இந்த நிலையில் கடந்த 26 -ம் தேதி கடலூர் எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர், பக்கிரி சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் உள்ள பக்கிரி சாமியிடம் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து தேசிய குழந்தைகள் உரி மைகள் பாதுகாப்பு ஆணையக் குழு உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் நேற்று விருத்தாசலத்திற்கு வந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விருத்தாசலம் சக்தி நகரில் உள்ள அச்சிறுமி பயின்ற பள்ளியை ஆய்வு செய்து, அந்தப் பள்ளிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் விருத்தாசலம் வருவாய்த்துறையினர் அந்தப் பள்ளிக்கு சீல் வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், “இந்தப் பள்ளியின் உரிமம் கடந்த 2014-ம்ஆண்டு முடிவடைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 101 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்ற னர். அவர்களுக்கு வருகிற திங்கட்கிழமை அன்று வேறு பள்ளியில் படிப்பதற்காக மாற் றுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் இப்பள்ளி செயல்பட உறுதுணையாக இருந்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். 9 ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் செயல்பட துணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.