

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் ரூ.49.35 லட்சம் மதிப்புள்ள 919 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
அதேபோல், துபாயில் இருந்துவந்த பெண் பயணியிடம் இருந்துரூ.43.23 லட்சம் மதிப்புள்ள 805கிராம் தங்கம் மற்றும், அபுதாபியில் இருந்து வந்த ஆண் பயணிடம் இருந்து ரூ.42.38 லட்சம் மதிப்புள்ள 792 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.