சிறுமிக்கு தொல்லை கொடுத்த வழக்கில் அஞ்செட்டி விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு தொல்லை கொடுத்த வழக்கில் அஞ்செட்டி விவசாயிக்கு 5 ஆண்டு சிறை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: சிறுமிக்குத் தொல்லை கொடுத்த வழக்கில் அஞ்செட்டியைச் சேர்ந்த விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அஞ்செட்டி அருகே அத்தக்கல்லைச் சேர்ந்தவர் சிவனாங்கி (30). விவசாயியான இவரைக் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in