டெக்சாஸ் | மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 மாடுகள்: தாடை, நாக்கு வெட்டப்பட்டும் ரத்தம் சிந்தாதது குறித்து விசாரணை

பிரதிநிதித்துவப் படம் | DALL·E 2 ஜெனரேட் செய்யப்பட்டது
பிரதிநிதித்துவப் படம் | DALL·E 2 ஜெனரேட் செய்யப்பட்டது
Updated on
1 min read

டெக்சாஸ்: அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 6 மாடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த மாடுகளின் தாடை மற்றும் நாக்குகள் வெட்டப்பட்டுள்ளன. இருந்தும் ரத்தம் ஏதும் சிந்தியதற்கான தடயம் எதுவும் மாடுகள் உயிரிழந்த இடங்களில் இல்லை என தெரிகிறது. இது குறித்து உள்ளூர் அரசு நிர்வாகத்தின் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெக்சாஸின் ஊரக பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரம் இந்த மாடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாடுகளின் நாக்குகள் அறுவை சிகிச்சை முறையின் கீழ் நேர்த்தியாக வெட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாடுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களில் ரத்தம் சிந்தியதற்கான தடயம் மற்றும் வாகனம் வந்து சென்றதற்கான டயர் மார்க் கூட எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடுகளின் இறப்புக்கான காரணம் எதுவும் இதுவரை அறியப்படாத சூழல் நிலவுகிறது. மேலும், இறந்து அழுகிய நிலையில் காணப்பட்ட இந்த மாடுகளின் எச்சங்களை எந்தவொரு பறவையும் தீண்டவில்லை என உள்ளூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிராசோஸ் மற்றும் ராபர்ட்சன் பகுதிகளில் உள்ள வெவ்வேறு இடங்களில் இந்த மாடுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in