பணி செய்ய விடாமல் தடுப்பதாக வட்டாட்சியர் புகார்: 8 பேர் மீது கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு

பணி செய்ய விடாமல் தடுப்பதாக வட்டாட்சியர் புகார்: 8 பேர் மீது கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு
Updated on
1 min read

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி (47) . இவர் கடந்த 5-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அவர் இரு புகார்களை அளித்துள்ளார்.

அதில், தான் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல், சிலர் வழக்கறிஞர் என்றும் சிலர் கட்சி உறுப்பினர்கள் என்றும்கூறிக் கொண்டு வட்டாட்சியர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளில் பேசி வருவதாகவும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் சத்யா,அருள், நந்திவர்மன், ஆனந்தன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் அருள் உள்ளிட்டவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக வட்டாட்சியரை அணுகியதாகவும், அப்போது அவர்களை அலட்சியப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in