Published : 24 Apr 2023 06:09 AM
Last Updated : 24 Apr 2023 06:09 AM

திருப்பத்தூரில் விடிய, விடிய நடத்திய - சாராய வேட்டையில் 20 பேர் கைது: சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராய வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் விடிய, விடிய நடந்த சாராய வேட்டையில் பல லட்சம் மதிப்பிலான சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனை மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை அதிகரித்து வருவதாக குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடத்தி சாராய தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ் ணனுக்கு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, வாணியம்பாடி மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில், 15 உதவி காவல் ஆய்வாளர்கள், 38 காவலர்கள் 15 குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர், கந்திலி, தமிழக–ஆந்திர எல்லைப்பகுதி களில் விடிய,விடிய நடந்த சாராய வேட்டையில் 4,200 லிட்டர் சாராய ஊறல்கள், 1,500 லிட்டர் சாராய பாக்கெட்டுகள், 505 மதுபாட்டில்கள், 50 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர்.

காவல் துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45), நவீன் (28), மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (60), ரவி (41), வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கோபி (40), பன்னீர்செல்வம் நகரைச் சேர்ந்த அனில்குமார் (23), காவலூர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (42), ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (49), நாயக் கனேரி பகுதியைச் சேர்ந்த சின்ன குழந்தை (70), பெரியாங் குப்பம் பகுதியைச்சேர்ந்த பெரியசாமி (42) வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த வேடி (53), மாடப்பள்ளி பகுதியைச்சேர்ந்த சங்கர் (58), பொம்மிகுப்பம் பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (65), மேற்கத்தியானூர் பகுதியைச் சேர்ந்த துளசி (43), சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (64), புதுமனை பகுதியைச் சேர்ந்த கோபி (43) உட்பட 20 பேரை காவல் துறையினர் கைது செய் தனர்.

பின்னர், அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனங்கள், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் மதுபாட்டில், வெளிமாநில மதுபான பாக்கெட்டுகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என எஸ்.பி., பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x