

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஒன்றில் இருந்து, கடந்த நவம்பர் மாதம் சில குறுஞ்செய்திகள் வந்தன. தொடர்ந்து அந்த மாணவியை மிரட்டி, அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை கேட்டு, வீடியோ காலில் வர வேண்டும், தான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும் என்றுஒருவர் மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அக்கவுண்ட்டை பிளாக் செய்து விட்டார். ஆனால் வேறொரு புதியஇன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்த நபர், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அந்த மாணவியின்புகைப்படத்தை எடுத்து, ஆடை இல்லாதது போன்று மார்பிங் செய்து, அந்த மாணவிக்கு அனுப்பி, நான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அந்த மாணவி இது குறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், இதைச் செய்தது கண்டமங்கலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது.
மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்தபோது இதுபோல் மேலும் சில பெண்களை மிரட்டி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீஸார் கைது செய்தனர். புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடு வதாக மிரட்டினார்.