

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தவறாக பேசியதாக உளவியல் துறை பேராசிரியரை சமயநல்லூர் மகளிர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியர் கருப்பையா. இவர் கடந்த மார்ச் மாதத்தில் பணி ஓய்வு பெற்றும், தற்போது கல்வியாண்டு முடியும் வரையில் பணி நீட்டிப்பில் பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில மாணவியர் புகார் அளித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துமணி, விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். இந்நிலையில், பேராசிரியர் கருப்பையா கைது செய்யப் பட்டார்.