மதுரையில் மீட்கப்பட்ட 50 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி

மதுரையில் மீட்கப்பட்ட 50 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் தொலைந்துபோன ரூ.8 லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்கள் சைபர் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டன. அதனை இன்று மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2 மாதங்களில் 50 செல்போன்கள் தொலைந்துபோனதாக வழக்குப் பதிவானது. இதுகுறித்து மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவில் சைபர் கிரைம் போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் தொலைந்துபோன ரூ. 8லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி சிவபிரசாத் இன்று ஒப்படைத்தார்.
மதுரை மாவட்டத்தில் தொலைந்துபோன ரூ. 8லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி சிவபிரசாத் இன்று ஒப்படைத்தார்.

இதில், ரூ.8 லட்சத்து 800 மதிப்புள்ள 50 செல்போன்கள் மீட்கப்பட்டன. அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்பி சிவபிரசாத், செல்போன் உரிமையாளர்களிடம் மீட்கப்பட்ட செல்போன்களை வழங்கினார். மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.1 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 650 மதிப்புள்ள 1027 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in