போதையில் காரை ஓட்டி சிக்னலில் நிற்காமல் காவலரை 18 கி.மீ. இழுத்து சென்றவர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மும்பை: நவி மும்பையின் பரபரப்பான பாம் பீச் சாலையில் போதையில் காரை ஓட்டி வந்த 23 வயது இளைஞர் சிக்னலை மதிக்காமல் சென்றதுடன் அங்கிருந்த போக்குவரத்து காவலரையும் காரில் இடித்து 18 கி.மீ தூரத்துக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதித்ய பென்டே என்பவர் பாம் பீச் சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்து சிக்னலை மதிக்காமல் சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர் சித்தேஷ்வர் மாலியை தனது காரின் பேனட்டில் இடித்து தள்ளி 18 கி.மீ. தூரத்துக்கு அவரை இழுத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் கவன் பாட்டாவில் சாலையின் நடுவே கண்டெயினரை நிறுத்தி காரை வழிமறித்துள்ளனர். காரில் இருந்த ஆதித்யா போதையில் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

வழக்குப் பதிவு

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி, போதையில் ஆபத்தான வகையில் காரை இயக்கி பொது வெளியில் ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்டபல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ்வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in