செல்போன் விளையாட்டு - பெற்றோர் கண்டித்ததால் மகன் தற்கொலை: விரக்தியில் தாயும் தற்கொலை

மகன் செல்வராஜ், தாய் சுமதி
மகன் செல்வராஜ், தாய் சுமதி
Updated on
1 min read

கரூர்: செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதனால் ஏற்பட்ட துக்கம் காரணமாக அரளி விதையை தின்று தாய் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் தரகம்பட்டியை அடுத்த சுண்டுகுழிப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சுமதி (44). இவர்களது மகன் செல்வராஜ் (23). பிஎஸ்சி பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் திரும்ப வேலைக்கு செல்லாமல் எப்பொதுழும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த செல்வராஜ் காட்டு பகுதிக்குச் சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த அவரது தாய் சுமதி, மகன் உயிரிழந்த விரக்தியில் அரளி விதையை அரைத்து தின்றுள்ளார். சுமதி திடீரென வாந்தி எடுத்ததால் உறவினர்கள் அவரை மைலம்பட்டி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி உயிரிழந்தார். குடும்பத்தினரும் உறவினர்களும் செல்வராஜின் இறுதிச்சடங்கு பணிகளில் இருந்ததால் சுமதியை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, தாய் உயிரிழப்பு தொடர்பாக சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in