ஐபிஎல் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்ற மேலும் 7 பேர் கைது

ஐபிஎல் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்ற மேலும் 7 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை சிலர் கள்ளச் சந்தையில் சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணித்தனர். அப்போது டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக முதல் கட்டமாக 17 பேரைக் கைது செய்தனர். தொடர் விசாரணையில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 62 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.65,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in