Published : 06 Apr 2023 06:40 AM
Last Updated : 06 Apr 2023 06:40 AM

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமிலிருந்து 7 இலங்கை தமிழர் விடுவிப்பு

திருச்சி: குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் இயங்கி வருகிறது.

இங்கு இலங்கை, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 118 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை காலம் முடிந்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், சிறு வழக்குகளில் தொடர்புடையவர்களை அவர்களது வீட்டிலிருந்தபடியே, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சிறப்பு முகாமுக்குள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு சில பரிந்துரைகள் அனுப்பப்பட்டிருந்தன. அதன்பேரில், முதற்கட்டமாக சிறுசிறு வழக்குகளில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

வழக்கு விசாரணைக்கு வருவர்: இதையடுத்து, சிறப்பு முகாமிலிருந்து இலங்கைத் தமிழர்களான ரவிகரன்(பெரம்பலூர் துறைமங்கலம் முகாம்), சசிகரன் (பெரம்பலூர் துறைமங்கலம் முகாம்), ஏசுதாஸ் (பெரம்பலூர் துறைமங்கலம் முகாம்), விஜயகுமார் (விருதுநகர் குள்ளூர்சந்தை முகாம்), பார்த்திபன் (கோவை கோட்டூர் முகாம்), கெட்டியான் பாண்டியன் (நாமக்கல் மேட்டுப்பட்டி முகாம்), கனகசபை (கும்மிடிபூண்டி முகாம்) ஆகிய 7 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இனி இவர்கள் அனைவரும் அந்தந்த முகாம்களிலுள்ள தங்களது வீடுகளில் இருந்து, நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சென்று வருவர் என போலீஸார் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x